தமிழக செய்திகள்

கொட்டாரத்தில்இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கொட்டாரத்தில்இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

தென்தாமரைகுளம்:

கொட்டாரம் லட்சுமிபுரம் காலணியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி மணிமேகலை (வயது26). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உண்டு. முத்துசாமிக்கு மது பழக்கம் உண்டு எனத்தெரிகிறது. நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த மணிமேகலை நேற்று காலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்