தமிழக செய்திகள்

தாய் கண்டித்ததால் சிறுமி தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே தாய் கண்டித்ததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் வசித்து வருபவர் வடமாநிலத்தை சேர்ந்த பெண் ஜித்து. இவருடைய மகள் காயத்ரி பரிதா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.

காயத்ரி பரிதா தொடர்ந்து செல்போனை பார்த்து வந்ததால் அவரது தாய் ஜித்து கண்டித்து உள்ளார்.

இதனால் மனமுடைந்த சிறுமி காயத்ரி பரிதா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் சிறுமி காயத்ரி பரிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை