தமிழக செய்திகள்

பள்ளிக்கூடத்தில் தண்ணீர் வாளியில் விழுந்து பெண் குழந்தை பலி

பல்லாவரம் பள்ளிக்கூடத்தில் தண்ணீர் வாளியில் விழுந்து பெண் குழந்தை பலியானார்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த பல்லாவரம், தர்கா சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார். அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு கவிஸ்ரீ இத்திகா என்ற 9 மாத பெண் குழந்தை இருந்தது.

இவர்களது வீட்டின் அருகே மழலையர் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. அந்த பள்ளிக்கூடத்தில் 3 அறைகள் மட்டுமே உள்ளன. இங்கு ஜெயஸ்ரீ ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அங்கு 4 குழந்தைகள் மட்டுமே படித்து வருகின்றனர்.

ஜெயஸ்ரீ நேற்று காலை தனது குழந்தை கவிஸ்ரீ இத்திகாவுடன் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். மதியம் பள்ளிக்கூடத்தின் 2-வது அறையில் உள்ள கழிப்பறைக்கு சென்ற குழந்தை கவிஸ்ரீ இத்திகா, அங்கிருந்த தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்துவிட்டது. இதில் நீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறிய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் உடலை பார்த்து ஜெயஸ்ரீ கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுபற்றி பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்