தமிழக செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்

சுவாமிமலை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

கபிஸ்தலம்;

சுவாமிமலை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

காதல்

சுவாமிமலை பகுதியை சோந்தவர் காசிநாதன். இவருடைய மகன் கவியரசன் (வயது22). டிரைவரான இவர் 17 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணை ஊரை விட்டு அழைத்து சென்று விட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கைது

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசனை தேடி வந்தனர். இந்தநிலையில் கவியரசனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கவியரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்