தமிழக செய்திகள்

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

தினத்தந்தி

தஞ்சாவூர்;

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பள்ளி மாணவி கர்ப்பம்

தஞ்சையை அடுத்த திட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மகேஸ்வரன் (வயது 26). பெயிண்டர். இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவியுடன் பழகி வந்தார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்கு சென்று விடுவார்கள் என்பதால் பள்ளி விடுமுறை நாட்களில் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போதும் மாணவியை வற்புறுத்தி மகேஸ்வரன் உல்லாசமாக இருந்துள்ளார். இதன் விளைவாக மாணவி 2 மாதம் கர்ப்பம் அடைந்தார்.

10 ஆண்டுகள் சிறை

இந்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தினார்.இந்த வழக்கு தஞ்சையில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மகேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் அவர் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு