சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இத்தாலியின் வாடிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
புனிதம் பட்டம் பெற்ற தேவசகாயம் தமிழகத்தை சேரந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தேவசகாயம் இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் பிறந்தது நாம் அனைவருக்கும் கூடுதல் பெருமை. மேலும் இத்தாலியில் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்துள்ளது. இது உலகம் முழுவதும் வாழும் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை.
என்று கூறியுள்ளார்.