தமிழக செய்திகள்

ஞான மாரியம்மன் கோவில் திருவிழா

சீரியம்பட்டி கிராமத்தில் ஞான மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

தினத்தந்தி

பாலக்கோடு

பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞானமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. சீரியம்பட்டி, ஈச்சம்பள்ளம், சீரண்டபுரம் ஆகிய கிராம மக்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் திருவிழா கொண்டாடி வருகின்றனர். விழாவையொட்டி ஏரிக்கோடி முனியப்பன் சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டது. விழாவையொட்டி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். அம்மனுக்கு கூழ் ஊற்றுதல்,, மாவிளக்கு எடுத்தல், தட்டுவரிசை எடுத்தல், அலகு குத்திக்கொள்ளுதல், பால்குடம் எடுத்தும், பல்வேறு சாமி வேடங்கள் அணிந்தும், பொங்கல் வைத்தும் ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை