தமிழக செய்திகள்

இந்து முன்னணி சார்பில் கோ பூஜை

வந்தவாசியில் இந்து முன்னணி சார்பில் கோ பூஜை நடந்தது.

தினத்தந்தி

வந்தவாசி

வந்தவாசியில் மாட்டு பொங்கலை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் கோ பூஜை மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் புதுத்தெருவில் உள்ள சிவசக்தி விநாயகர் கோவிலில் நடைபெற்றது.

இதையொட்டி பசுமாட்டுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் பசுமாட்டுக்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து பெண்கள் பூஜை செய்தனர். மாம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.லட்சுமண சுவாமிகள் பூஜையை நடத்தினார்.

இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் சீனுவாசன், கார்த்திக் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது