தமிழக செய்திகள்

கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது

பவானி பெரியார் நகரை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகள் தீபிகா (வயது 19) அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் சலங்கபாளையத்தை சேர்ந்த செல்வம் என்பவருடய மகன் கணேஷ் (25) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இதற்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் நேற்று காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோபியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் மேனகா ஆகியோர் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கணேஷ் வீட்டாருடன் காதல்ஜோடியை அனுப்பி வத்தனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை