தமிழக செய்திகள்

கோபி மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

கோபி மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா.

கடத்தூர்

கோபி அருகே உள்ள புது வள்ளியம்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் சிவக்குமார் (வயது 22). பி.காம் பட்டதாரி. இவர் கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இதேபோல் பவானி பழனிபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருடைய மகள் ஜனனி (23). பி.எஸ்.சி. பட்டதாரி. சிவக்குமாரும், ஜனனியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் இவர்களுடைய காதலுக்கு 2 பேரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி சவுண்டபூரில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரின் பெற்றோர்களையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சிவக்குமார் வீட்டுக்கு ஜனனி அழைத்து செல்லப்பட்டார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை