தமிழக செய்திகள்

வேதாரண்யம் கடற்கரையில் கிடந்த அம்மன் சிலை

வேதாரண்யம் கடற்கரையில் கிடந்த அம்மன் சிலை கிடந்தது

தினத்தந்தி

வேதாரண்யம்:

வேதாரண்யம் கடற்கரையில் அம்மன் சிலை கிடந்தது. இதனை வருவாய்த்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அம்மன் சிலை

வேதாரண்யத்தில் சன்னதி கடல் உள்ளது. இங்கு நேற்று மாலை பலத்த காற்று வீசியது. அப்போது கடலில் அலைகள் ஆர்ப்பரித்தது. இந்தநிலையில் திடீரென கடல் உள்வாங்கியது. இதையடுத்து கடற்கரை பகுதி சேறாக காணப்பட்டது. இந்த சேற்றில் 3 அடி உயரம் கொண்ட சிமெண்டால் ஆன அம்மன் சிலை கிடந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடற்கரையில் உள்ள பூங்காவை சுற்றி பார்க்க வந்தவர்ள் இந்த சிலயை ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடற்கரையில் கிடந்த அம்மன்சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள கோவில்களில் குடமுழுக்கின் போது பழைய சிலைகள் கடலில் விடுவது வழக்கம். அதேபோல் குடமுழுக்கு நடந்த கோவிலில் இருந்து இந்த சிலை கடலில் விடப்பட்டு இருக்கலாம் என தெரியவந்தது. 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை