தமிழக செய்திகள்

பேரம்பாக்கம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

பேரம்பாக்கம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை சாய் ரித்விக் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி பூங்கோதை (வயது 34). இவர் நேற்று காலை தனது குழந்தைகளை இருளஞ்சேரியில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு மொபட்டில் பேரம்பாக்கம் வழியாக சத்தரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பூங்கோதை கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறி கூச்சலிட்டும் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் அந்த நபர்களை விரட்டிச் சென்று பிடிக்க முடியவில்லை.

இச்சம்பவம் குறித்து பூங்கோதை மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பப்பி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து பெண்ணிடம் சங்கிலியை பறித்து தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து