தமிழக செய்திகள்

தலைமை ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு

கே.வி.குப்பம் அருகே தலைமை ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு

தினத்தந்தி

கே.வி.குப்பம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை.

இவரது மகள் சங்கரி (வயது 55). இவர் கே.வி.குப்பம் அருகே அர்ஜுனாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை இவர் குடியாத்தம் - காட்பாடி நெடுஞ்சாலை அர்ஜுனாபுரத்தில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அவர்களில் பின்னால் அமர்ந்து வந்தவர் சங்கரியின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டார்.

சங்கரி சுதாரிப்பதற்குள் அவர்கள் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்று விட்டனர்.

இதுகுறித்து சங்கரி கே.வி.குப்பம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து