சென்னை,
தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.44,000-க்கும் ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.5,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.