சென்னை,
தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ. 43,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.5,452-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு உயர்ந்து 75.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 75.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.