தமிழக செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.33,392-க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.33,392-க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.4,174-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில்துறையில் ஏற்பட்ட தேக்கத்தால், பாதுகாப்பான முதலீடுகளில் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தினர். இதன் காரணமாக தங்கத்தில் அதிக மூதலீடுகள் செய்யப்பட்டதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.

தெழில்துறை தேக்கத்தால் பொருளாதார பாதிப்பு குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, சவரன் ரூ.33,392-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.28 குறைந்து ரூ.4,174-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.28 குறைந்து ரூ.4,174-க்கு விற்பனை ஆகிறது.

மேலும் சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,400 குறைந்து ரூ.67,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து சவரன் ரூ.33,616-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 31 குறைந்து ரூ.4,205-க்கு விற்பனையானது. அதேபோல் வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டது. எனவே ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் ரூ.68,700-க்கு விற்பனையானது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து