தமிழக செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

மரைக்காயர் பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து அடுத்தடுத்து கடத்தல் பொருட்கள் பிடிபடுவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினத்தில் உள்ள ஒரு தோப்பில் கியூ பிரிவு மற்றும் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22,400 வலி நிவாரணி மாத்திரைகள், சோப்பு, அழகு சாதன பொருட்கள், இரண்டு படகு எஞ்சின் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரைக்காயர் பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து அடுத்தடுத்து கடத்தல் பொருட்கள் பிடிபடுவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.