தமிழக செய்திகள்

'பப்ஜி' மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

யூ டியூப்பில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட 'பப்ஜி' மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஆன்லைன் விளையாட்டுகளில் டிப்ஸ் தருவதாக கூறி சிறுவர், சிறுவர்களிடம் யூ-டியூப்களில் ஆபாசப் பேச்சுகள் பேசியதாக பப்ஜி மதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதன் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்தார்.

இருமுறையும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து