தமிழக செய்திகள்

கடலூர் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு போலீசார் விசாரணை

கடலூர் அருகே மர்மநபர் ஒருவர் அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்கினார். இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பண்ருட்டி அருகே பாலூரில் இருந்து இன்று காலை அரசு பஸ் பயணிகளுடன் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் ஓட்டேரி பஸ் நிறுத்தம் வழியாக வந்த போது, திடீரென பஸ்சின் பின் பக்க கண்ணாடியை மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்கினார். இதில் பஸ் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து விழுந்தது. இதை பார்த்த பயணிகள், கூச்சலிட்டனர். அதற்குள் கல்வீசி தாக்கிய நபர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இருப்பினும் இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர் யார்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...