தமிழக செய்திகள்

கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்

கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயமடைந்தனர்.

தினத்தந்தி

திருவண்ணாமலையிலிருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை கூடுவாஞ்சேரி அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் ஒரு புறமாக கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 16 பேர் காயம் அடைந்தனர்.

இதனை பற்றி தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டனர்.

பின்னர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு