நெல்லை:
பாளையங்கோட்டை வணிக வரித்துறை அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது மத்திய அரசு அறிவித்தது போல் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணை தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் குமாரவேல், செயலாளர் மணிகண்டன் உலகநாதன், நிர்வாகிகள் ரத்தினசாமி, முத்துகிருஷ்ணன், கற்பகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்ட இணைச்செயலாளர் சுவாமிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.