தமிழக செய்திகள்

திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்

திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

திருவெண்ணெய்நல்லூர் 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவெண்ணெய்நல்லூர் வட்டக் கிளையின் 2-வது பேரவை கூட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அன்பு முன்னிலை வகித்தார். துணை செயலாளர் சரவணன் வரவேற்றார். சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜானகி தேவி தீர்மானங்களை வாசித்தார். மாவட்ட பொருளாளர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒப்படைப்பு ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் ராஜேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட தலைவர் கேசவலு, வட்ட துணை செயலாளர் குமார், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க நிர்வாகிகள் ரவி, செந்தில்முருகன், பழனிவேல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை