தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட் காலத்தை நீட்டித்து உத்தரவு

தமிழ்நாட்டில் அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட் காலத்தை நீட்டித்து போக்குவரத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது மூன்று ஆண்டுகள் அல்லது ஏழு லட்சம் கிலோ மீட்டர் என உள்ளது . இதனை இனி வரும் காலங்களில் ஏழு ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவுப் பேருந்துகள் அல்லாத பிற அரசு பேருந்துகளின் ஆயுட் காலம் தற்போது ஏழு லட்சம் கிலோ மீட்டர் அல்லது ஆறு ஆண்டு காலம் என்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது இனி வரும் காலங்களில் ஒன்பது ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன தொழில் நுட்பம் கொண்ட பேருந்துகள் என்பதாலும், புதிய சாலை வசதிகள், நவீன வடிவமைப்பு காரணமாக ஆயுட் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை