தமிழக செய்திகள்

புதிதாக 188 மருத்துவர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது- மருத்துவர்கள் போராட்டத்தை தொடர்ந்து அரசு நடவடிக்கை

அரசு மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் புதிதாக 188 மருத்துவர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நோயாளிகளின் நலன் கருதி மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லாவிடில் அந்த இடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அரசு மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் புதிதாக 188 மருத்துவர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. நாளை அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும்.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப நாளை காலை வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...