தமிழக செய்திகள்

அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்கு பொருந்தாது - தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடியில் கடந்த 17-ந்தேதி முதல் 3 நாட்கள் கனமழை கொட்டித்தீர்த்தது.

தினத்தந்தி

சென்னை,

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது.

தற்போது, மழை நின்று வெள்ளநீர் வடிந்து வருகிறது. நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வடியாத காரணத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 18-ம் தேதியில் இருந்து இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்குப் பொருந்தாது என்று அம்மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். மழை பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடப்பதால் அரசு விடுமுறை பொருந்தாது என தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்