தமிழக செய்திகள்

அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மனிதசங்கிலி போராட்டம்

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மனிதசங்கிலி போராட்டம்

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுகிர்தா என்பவர் சென்னை தனியார் கல்லூரியில் இளநிலை மருத்துவம் முடித்து, மருத்துவராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணம் மருத்துவக்கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சுகிர்தா மரணத்திற்கு நீதி கேட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவக்கல்லூரி மாணவி சுகிர்தா உயிரிழப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி பாதுகாப்பு மற்றும் 8 மணி நேர வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்