தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி

எடப்பாடி கே.பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள பங்களாவில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து தங்குவதற்கு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து 2011 முதல் எடப்பாடி கே.பழனிசாமி தங்கியிருக்கும் பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்காளவை காலி செய்ய தொடங்கிய நிலையில், தனது சகோதரர் மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கோரியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களை காலி செய்துள்ள நிலையில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. புனரமைப்புப் பணிகள் முடிந்த பிறகு புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்களை பொதுப்பணித்துறை ஒப்படைக்க உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு