தமிழக செய்திகள்

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை-2025ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத் தேர்வை, பிளஸ்-1 வகுப்புக்கும் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. பிளஸ்-1 வகுப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நேரடியாக பிளஸ்-2 வகுப்பு பாடங்களை தனியார் பள்ளிகள் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவதை தவிர்ப்பதற்காகவும், பிளஸ்-1 வகுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் கொண்டு வரப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது.

பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்றால், 3 ஆண்டுகள் தொடர்ந்து பொதுத்தேர்வு பயத்திலேயே மாணவர்கள் இருப்பார்களே என அப்போது பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இந்தநிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு 8 ஆண்டுகளுக்கு பிறகு, பொதுத்தேர்வு இனி கிடையாது என மாநில பள்ளிக்கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி வந்த நிலையில் தேர்வு ரத்து என்ற அறிவிப்பால் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025ஐ செயல்படுத்தும் விதமாக 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு கல்வியாண்டு முதல் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என்றும் முந்தைய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் 2030-ம் ஆண்டு வரை அரியர் தேர்வு எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்