தமிழக செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கான திட்ட பயனாளிகளின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கான திட்டத்தின் பயனாளிகளுக்கான ஆண்டு வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

2021-22 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில், இலவச மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்பு பெட்டி மற்றும் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டங்களை பெறுவதற்கு பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கான வருமான வரம்பு 72 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை நிறைவேற்றும் விதமாக வீட்டு மனைகள், தையல் இயந்திரங்கள் மற்றும் சலவை பெட்டிகள் ஆகியவற்றை பெறுவதற்கான பயனாளிகளின் ஆண்டு வருமானத்தின் உச்ச வரம்பை 72 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?