தமிழக செய்திகள்

அரசின் திட்டங்கள்

அரசின் திட்டங்கள் கிராமப்புறங்களில் சென்றடைய உள்ளாட்சி அமைப்புகள், துற அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

தினத்தந்தி

அரசின் திட்டங்கள் கிராமப்புறங்களில் சென்றடைய உள்ளாட்சி அமைப்புகள், துற அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

திருவாரூர் ஒன்றியம் மாங்குடி ஊராட்சியில் சிவன் கோவில் குளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதையும், நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் குளக்கரை தூய்மை பணி நடைபெறுவதை கலெக்டா சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குளக்கரையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர் கலெக்டர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாங்குடி ஊராட்சியில் ரூ.34 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் சிவன் கோவில் குளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி குளக்கரை தூய்மை படுத்தும் பணி நடைபெறுகிறது.

ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

அரசின் திட்டங்கள் கிராமப்புறங்களில் சென்றடைய உள்ளாட்சி அமைப்புகள், துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சவுந்தர்யா, தாசில்தார் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஷ்வரி, சுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், உதவிபொறியாளர் வேதவிநாயகம், ஊராட்சி மன்ற தலைவர் சித்ராகுருநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்