தமிழக செய்திகள்

பொன்னாங்குடியில் அரசு பள்ளி கட்டிடம்

பொன்னாங்குடியில் அரசு பள்ளி கட்டிடத்தை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் திறந்து வைத்தார்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள பொன்னாங்குடியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.11.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் ராமுகனக கருப்பையா வரவேற்றார். திட்ட இயக்குனர் சிவராமன், செயற்பொறியாளர் வென்னிலா, தி.மு.க. கல்லல் ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் அசோகன், கல்லல் சேர்மன் சொர்ணம் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கண்டரமாணிக்கம் கிளை செயலாளர் ராமன், ஊராட்சி மன்ற தலைவர் பெருச்சிக்கோவில் வைரமணி, பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு