தமிழக செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஜூன் 20-க்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஜூன் 20-க்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரநிதிகளிடம் ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று மாலை முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்.

இந்த சூழலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் வரும் 20 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேஎண்டும் சுற்றறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை பின்பற்றி இந்த சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை