தமிழக செய்திகள்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைந்து, பூரண நலம்பெற வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை 11 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. அடுத்து அவர் ஆளுநர் மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியாகி உள்ளது.

இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்து, கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன், பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. என்று கூறினார்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைந்து, பூரண நலம்பெற வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்கள் விரைவில் குணமடைந்து, பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

இதேபோல, உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா விரைவில் குணமடைந்து, பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். மேலும் குணமடைந்து தங்கள் பிரத்யேக பொது சேவையைத் தொடரவும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு