சென்னை,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் கவர்னர் மாளிகையில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் உடல்நிலை பற்றி காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர்ந்து கொரோனா அறிகுறி தென்படவில்லை. அவர் துடிப்பாகவும், நலமாகவும் உள்ளார். மருத்துவக் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.