தமிழக செய்திகள்

தேம்பி அழுத கவர்னர் இல.கணேசன்

கவர்னர் இல.கணேசன் தேம்பி அழுதார்.

திருச்சி:

மணிப்பூர் மாநில கவர்னராக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன். இவர் காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்காக திருச்சிக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் கார் மூலம் அவர் காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து மாலையில் திருச்சிக்கு வந்த அவர், திருச்சி அருகே சீராத்தோப்பு பகுதியில் உள்ள இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம.கோபாலனின் சமாதிக்கு சென்றார். அங்கு ராம.கோபாலன் புகைப்படத்தை பார்த்து கைகளை கூப்பி வழிபட்ட அவர், தேம்பி அழுதார். உடனே அருகில் இருந்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள் அவரை சமாதானம் செய்தனர். இதையடுத்து சமாதி முன் அமர்ந்து தியானம் செய்த அவர், பின்னர் அங்கு கட்டப்பட்டு வரும் நினைவிடத்தை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் சென்னை செல்வதற்காக இரவு 7 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தார். ஆனால் இரவு 8.45 மணிக்கு வர வேண்டிய சென்னை செல்வதற்கான விமானம் 2 மணி நேரம் தாமதமாக இரவு 10.45 மணிக்கு வந்தது. இதனால் சுமார் 4 மணி நேரம் திருச்சி விமான நிலையத்தில் அவர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இரவு 11.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் அவர் சென்னைக்கு சென்றார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்