தமிழக செய்திகள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசு கொடுத்த அனுமதி ரத்து -ஐகோர்ட் கிளை

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய அரசு கொடுத்த அனுமதியை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. #KiranBedi

மதுரை,

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017-ல் மத்திய உள்துறை அமைச்சகம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு சிறப்பு அனுமதி கொடுத்தது. இந்த் சிறப்பு அனுமதியை எதிர்த்து புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய அரசு கொடுத்த அனுமதியை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் ஆவணங்களை கேட்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்ற மத்திய அரசின் அறிவிப்வை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி