தமிழக செய்திகள்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடந்த 2 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும் ராஜ்பவனில் தனிமைப்படுத்திக்கொள்ளும் ஆளுநரை மருத்துவர்கள் குழு கண்காணிக்கும் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு