தமிழக செய்திகள்

பாரதத்தின் கலாசாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் நாகூர் தர்கா பிரதிபலிக்கிறது - கவர்னர் ஆர்.என்.ரவி

நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவின் 467-வது ஆண்டு கந்தூரி விழா நடந்து வருகிறது.

தினத்தந்தி

கந்தூரி விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று நாகூருக்கு வருகை தந்தார். பின்னர் தர்காவினுள் சென்ற ஆளுநர் ரவி, பெரிய ஆண்டவர் சமாதியில் இஸ்லாமியர்களோடு சிறப்பு துவா ஓதப்பட்ட நிகழ்வில் பங்கேற்றார். பின்னர் தர்கா வாசலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், ''467 வது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள். புனிதரின் ஆசீர்வாதங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாசாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழைமை வாய்ந்த இந்த தர்கா பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று எழுதினார்.

இது தொடர்பான ஆளுநர் மாளிகை எக்ஸ் தள பதிவில், ``ஆளுநர் அவர்கள், நாகூர் தர்காவின் விசேஷமிக்க சந்தனக்கூடு வருடாந்திர கந்தூரி திருவிழாவில் பங்கேற்று, தமிழ்நாட்டின் குறிப்பாக தென் மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நமது மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்