ராமநாதபுரம்,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக நேற்று ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். நேற்று மண்டபம் மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்று, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர், பின்னர் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளுடனும் கலந்துரையாடினார்.
அதன்பிறகு உச்சிப்புளி நாகாச்சி பகுதியில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று பார்வையிட்ட அவர், மாலையில் தேவிப்பட்டினம் நவாஷண கேவிலுக்கு சென்றார். அங்கு அவர் கடலுக்குள் உள்ள நவகிரகத்தை சுற்றி வந்து தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலையில் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அங்கு அவருக்கு கேவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. பின்பு கவர்னர் ஆர்.என்.ரவி கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார்.