தமிழக செய்திகள்

பி.வி. சிந்து, மாளவிகாவுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் வாழ்த்து

சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்து மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற மாளவிகா இருவருக்கும் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

புதுவை,

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் நடைபெற்ற சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் பி.வி. சிந்து மற்றும் மாளவிகா பன்சோட் இருவரும் மோதினர். இந்த ஆட்டத்தில் மாளவிகாவை வீழ்த்தி பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் மாளவிகா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த நிலையில், கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்து மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற மாளவிகா இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

'சையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்து அவர்களுக்கும், மிகச்சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி மாளவிகா பன்சோட் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு