தமிழக செய்திகள்

அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது; துரைமுருகன்

அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரின் 2-வது பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக நிர்வாகிகள் வழங்கினர். ஆளுநருடனான சந்திப்பின்போது பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

ஆளுநரை சந்தித்த பிறகு துரைமுருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, தமிழக அமைச்சர்கள் குறித்து ஆளுநரிடம் முறைகேடு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை