தமிழக செய்திகள்

சென்னை பல்கலைக்கழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு தனிக் கவனம் செலுத்தவேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை பல்கலைக்கழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தவேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

"தமிழகத்தில் சென்னை பல்கலைக் கழகம் பழமையான, பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது. இப்பல்கலைக் கழகத்தில் 750 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 226 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

மேலும் பல்கலைக்கழக ஊழியர்கள் 1,400 பேர் பணிபுரியும் இடத்தில் 600 பேர் மட்டுமே உள்ளனர். தனிச் சிறப்புடன் விளங்கும் சென்னை பல்கலைக்கழகம் மேலும் தொடர்ந்து சிறப்புடன் நடைபெறவும், சிறந்த கல்வியை போதிக்கவும், தேவையான பேராசிரியர்களையும், பணியாளர்களையும் நியமிக்கவும், போதிய நிதியை ஒதுக்கி, சென்னை பல்கலைக் கழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்