தமிழக செய்திகள்

மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் ஜி.பி.பார்மசி கல்லூரி மாணவி சாதனை

மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் ஜி.பி.பார்மசி கல்லூரி மாணவி சாதனை படைத்தார்.

திருப்பத்தூர்

மாநில அளவிலான விளையாட்டு பேட்டியில் ஜி.பி.பார்மசி கல்லூரி மாணவி சாதனை படைத்தார்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியில் பார்மசி கல்லூரி மாணவர்களுக்கு இடையே மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகள் நடந்தன. 4 நாட்கள் நடந்த இந்த போட்டியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 45 கல்லூரிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் மாணவிகளுக்கான டென்னிகாய்ட் ஒற்றையர் போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள ஜி.பி.பார்மசி கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி பூவர்சினி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

மாணவி பூவர்சினியை கல்லுரி தாளாளர் ஜி.பொன்னுசாமி, முதல்வர் தீன்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டினர். மேலும், மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ரூ. 40 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்