தமிழக செய்திகள்

பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம்

கருங்கல் போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம்

தினத்தந்தி

கருங்கல், 

கருங்கல் அருகே உள்ள மத்திக்கோடு அம்பலத்துவிளையை சேர்ந்தவர் ஜார்ஜ். இவருடய மகள் பிரின்சி (வயது 23), பி.எஸ்சி., பி.எட். பட்டதாரி. இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த குமரேசன் மகன் அருள்ராஜ் (25) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அருள்ராஜ் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கருங்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் இசக்கி துரை இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேசி காதல் ஜோடியை சேர்த்து வைத்து அனுப்பினர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்