தமிழக செய்திகள்

மீஞ்சூர் ஸ்ரீசந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஸ்ரீசந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் 21-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தினத்தந்தி

இவ்விழாவிற்கு கல்லூரி தலைவர் நேமிசந்த் கட்டாரியா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுஜாதா, கல்லூரி துணைத் தலைவர் சாந்திலால் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி செயலாளர் லலித்குமார் ஓ.ஜெயின் அனைவரையும் வரவேற்று விழாவை துவக்கி வைத்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தென்னிந்திய செலவு மற்றும் பணி கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் திவ்யாஅபிஷேக் பங்கேற்று 402 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் முன்னாள் கல்லூரி தலைவர் காந்திலால் எச்.சங்வி, துணைச் செயலாளர் சுரேஷ் ரத்தோட், நிர்வாகி ஜிதேந்தர் எஸ்.மேக்தா கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்