சென்னை,
நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் (15)விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம்,நேரம் ஆகியவை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் ,கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.