தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் தொடக்கம்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சியினர் துவங்கியுள்ளனர். அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள நிலையில், திமுக சார்பில் கிராம சபை கூட்டங்களை நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி இன்று தமிழகத்தில் உள்ள 16 ஆயிரத்திற்கும் மேலான கிராமங்கள் மற்றும் வார்டுகளில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் இன்று திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரம்புத்தூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கிராமத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்.

மேலும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் மேல்பட்டி கிராமம், பெருளாளர் டி.ஆர்.பாலு திருவள்ளூர் மாவட்டம் நடுக்குத்தகை, கே.என்.நேரு திருச்சி மாவட்டம் பெருவிளநல்லூர், விழுப்புரம் திருவெண்ணைநல்லூரில் துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, சென்னை ராயபுரத்தில் ஆ.ராசா, திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியம் வட சின்னார்பாளையம் கிராமத்தில் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை