தமிழக செய்திகள்

மின்னல் தாக்கி தென்னை மரம் விழுந்ததில் தாத்தா-பேத்தி பலி

ஆற்காடு அருகே விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தாத்தா-பேத்தி தென்னை மரம் விழுந்ததில் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்ட பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மழை பெய்து வந்தது. எனினும் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

ஆற்காட்டை அடுத்த திமிரி அருகே உள்ள ஆயிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 72). இவரது மகன் ஏகாம்பரம். விவசாயி. ஏகாம்பரத்தின் மகள் லாவண்யா (வயது 17), பிளஸ்-2 படித்துவிட்டு மேல் படிப்பில் சேர இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வெங்கடேசன், அவரது பேத்தி லாவண்யா ஆகிய இருவரும் விவசாய நிலத்தில் வைக்கோல் போர் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டுள்ளது.

அப்போது இடி-மின்னல் ஏற்பட்டது. திடீரென அருகில் இருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியுள்ளது. இதில் வெங்கடேசன், அவரது பேத்தி லாவண்யா மீது தென்னை மரம் சாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இருவரும் பலியானார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு