புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 856 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 88 பேருக்கு தொற்று உறுதியானது. மாகி பகுதியில் 85 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பலியானார்.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 117 பேரும், வீடுகளில் 694 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 142 பேர் குணமடைந்தனர். தொற்று பாதிப்பு 1.81 சதவீதமாகவும், குணமடைவது 97.90 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று முன்தினம் முதல்கட்ட தடுப்பூசியை 3 ஆயிரத்து 986 பேரும், 2-ம் கட்ட தடுப்பூசியை 7 ஆயிரத்து 297 பேரும் போட்டுள்ளனர். இதுவரை 9 லட்சத்து 87 ஆயிரத்து 684 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.