தமிழக செய்திகள்

கிரானைட் முறைகேடு வழக்கு: மேலூர் கோர்ட்டில் துரை தயாநிதி ஆஜர்

கிரானைட் முறைகேடு வழக்கில் மேலூர் கோர்ட்டில் துரை தயாநிதி ஆஜரானார்.

தினத்தந்தி

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் உள்ள கிரானைட் குவாரியில் அனுமதி இல்லாத இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012-13-ம் ஆண்டு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. குவாரி நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதி உள்பட சிலர் மீது மேலூர் குற்றவியல் கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மேலூர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது துரை தயாநிதி ஆஜரானார். பின்னர் இந்த வழக்கை மதுரை மாவட்ட கனிம வள சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி மேலூர் குற்றவியல் கோர்ட்டு உத்தரவிட்டது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்